திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:00 IST)

ரயிலில் சிக்கியவர்களை மீட்க புறப்பட்டது ராணுவம்.. 500க்கும் மேற்பட்ட பயணிக அவதி..!

திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி கிளம்பிய ரயில் ஸ்ரீவைகுண்டம் அருகே கனமழை காரணமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த ரயிலில் இருக்கும் சுமார் 1000 பயணிகள் உணவு தண்ணீர் கூட இல்லாமல் மணி கணக்கில் தவித்து வந்தனர். 
 
இந்த நிலையில்  ரயிலில் சிக்கியவர்களை மிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரயிலில் சிக்கியவர்களை மீட்க சற்றுமுன் ஹெலிகாப்டர் புறப்பட்டது
 
ரயிலில் சிக்கி இருப்பவர்களை மீட்க, மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டதாகவும், ஸ்ரீவைகுண்டம் அருகே சிக்கியிருக்கும் 500க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்க ராணுவ வீரர்கள் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
முதல்கட்டமாக ரயிலில் சிக்கி இருப்பவர்களுக்கு உணவு, தண்ணீர் அளித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva