வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (22:13 IST)

அர்ஜுன மூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக: அதிகாரபூர்வ அறிக்கை!

அர்ஜுன மூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்த நிலையில் தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி என்பவரை நியமனம் செய்தார் 
 
யார் இந்த அர்ஜுனா மூர்த்தி என ஊடகங்கள் தேடிய நிலையில் அவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் என்பது தெரிய வந்தது. ஆனால் அர்ஜுனா மூர்த்தி தான் ரஜினிகாந்த் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் உடனே தனது டுவிட்டரில்  தலைவருடன் நான் என்று மாற்றிக் கொண்டதோடு தனது ராஜினாமா கடிதத்தையும் பாஜகவுக்கு அனுப்பிவிட்டார் 
 
இந்த நிலையில் தமிழக பாஜக அறிவுசார்  பிரிவின் மாநில தலைவர் அர்ஜுனா மூர்த்தி அவர்களுடைய ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்குவதாகவும் பாஜக அறிவிப்பு ஒன்று செய்து உள்ளது
 
மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி தொடர்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப் படுவதாக  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது