1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2024 (09:55 IST)

திமுகவும், நக்சல்களும் சேர்ந்து எடுத்த பயங்கரவாத படம் ‘விடுதலை 2’?? - அர்ஜுன் சம்பந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

Arjun Sampath

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘விடுதலை 2’ படம் நக்சல்வாதத்தை ஆதரித்து பயங்கரவாதத்தை ஏற்படுத்தும்படியாக உள்ளதாகவும், படத்தை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா" பாய வேண்டும். முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் மீது.

 

ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீது என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) கவனம் செலுத்த வேண்டும்

 

காவல்துறையின் விசாரணை காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கௌரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குனர் 

 

திரையரங்கை பிரச்சார மேடையாக மாற்றி... தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார்

 

பெருமாளின் பயங்கரவாதத்தினால் அம்மாவட்டங்கள் அடைந்த பின்னடைவு ஏராளம் 

 

பாரதத்தின் அடுத்த ரெட் காரிடாராக தமிழகத்தை மாற்ற துடிக்கும் சக்திகளை... திமுக ஊக்குவிப்பது அம்பலமாகிறது 

 

நக்சல்வாதத்தின் கொடுமைகளை கிழக்கு மாநிலங்களின் அவல நிலையை கண்டு தமிழகம் பாடம் கற்கட்டும்

 

சாலைகள் போடுவதை எதிர்த்து போராடும் அனைவரும் அயோக்கியர்களே...

 

திரையரங்கில் கைதட்டி விசிலடித்து இத்திரைப்படத்தை கொண்டாடும் அனைத்து இளைஞர்களும் 

 

நக்சல் வாதத்தினால் பின்னடைவை சந்தித்த மாநிலங்களை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் 

 

இன்று தமிழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்ற இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நக்சல்வாதத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை சார்ந்தவர்கள் தான் 

 

அவர்களிடம் நீங்கள் பேசும் புரட்சியை கூறி பாருங்கள்... வாயில் மட்டுமல்ல எல்லாவற்றின் மூலமாகவும் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K