வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஜூலை 2019 (15:16 IST)

சென்னை கல்லுக்குட்டை ஏரியில் ஆய்வு – அறப்போர் இயக்கத்தினர் கைது !

சென்னை தரமணியில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்ய சென்ற அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த 8 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்கள் இந்த ஆண்டு போதிய மழை இல்லாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி அல்லாடின. இதனால் நகரங்களில் உள்ள நீர்நிலைகளும் வற்றின. இதனால் நீர்நிலைகளை தூர்வாரவேண்டுமென பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

இதற்காக சென்னை தரமணியில் உள்ள கல்லுக்குட்டை ஏரியை தூர்வாற அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வல இயக்கத்தைச் சேர்ந்த 8 பேர் சென்றுள்ளனர். ஆனால் முறையான அனுமதி இல்லாமல் ஆய்வு மேற்கொள்ள முடியாது எனக் கூறி அவர்களைக் காவல்துறைக் கைது செய்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அறப்போர் இயக்கம் ‘ ஏரிக்கு நீர்வரும் கால்வாய் மற்றும் வெளியேறும் கால்வாய்களை ஆய்வு செய்யவே சென்றோம். ஏரியில் குப்பைக் கொட்ட, கட்டிடம் கட்ட தடை இல்லை. ஆனால் ஆய்வு செய்ய மட்டும் தடையா ?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இது பொதுமக்களிடையே காவல்துறையின் மீது கோபத்தை உண்டாக்கும் வண்ணம் உள்ளதாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.