புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 செப்டம்பர் 2018 (21:55 IST)

தரமணி ஹீரோவின் அடுத்த படம்

ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தரமணி படத்தின் நாயகன் வசந்த் ரவியின் அடுத்தப் படத்தின் போஸ்டரை அனிருத் வெளியிட்டுள்ளார்.


கடந்த ஆண்டு ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் நடித்து வெளியாகி கவனத்தைப் பெற்ற படம் தரமணி. நவீன கால ஆண் பெண் உறவுகளுக்கிடையில் ஏற்படும் உறவுச் சிக்கலைப் பற்றிப் பேசிய இப்படம் பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பபைப் பெற்றது.

இப்படத்தில் நாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்றார். சென்ற ஆண்டின் சிறந்த புதுமுக நடிகருக்கான ஃபில்ம்பேர் விருதையும் வென்றார். தற்போது இவர் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் நடிக்கும் படத்திற்கு ராக்கி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா பொறுப்பேற்றுள்ளார். தர்புகா சிவா இசையமைக்கும் இப்படத்தினை ரா ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் பெயர் மற்றும் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.