வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (14:31 IST)

ஆழித்தேராட்டம்: திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
 
 உள்ளூர் விசேஷங்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆழி தேரோட்டம் உலக புகழ் பெற்றது என்பதும் இந்த தேரோட்டத்தை பார்ப்பதற்காக தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் உலகில் உள்ள சில பகுதிகள் இருந்தும் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஆழித்தேரோட்டத்தை ஒட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார். இதனை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஏப்ரல் ஒன்றாம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran