தமிழக மக்களுக்காக சிறையில் விரதம் இருந்தேன்… சசிகலா ஆடியோ!

புதன், 30 ஜூன் 2021 (08:39 IST)
சிறைக்கு சென்று திரும்பியுள்ள சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை கட்சியை காப்பாற்ற வரவேண்டும் என தொண்டர்கள் சிலர் தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்துள்ளனர். இது சம்மந்தமான ஆடியோக்கள் வெளியாகி சசிக்லாவோடு பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் சசிகலாவின் ஆடியோக்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் வெளியான ஆடியோவில் தேனியைச் சேர்ந்த கண்ணன் என்ற அதிமுக தொண்டரிடம் பேசியுள்ள சசிகலா ‘கட்சி இப்படி வீணாகிட்டு இருக்குறதை இனியும் என்னால் பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியாது. இப்போது மோசமான நிலைக்கு போயிடுச்சி. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்றுதான் நான் ஒதுங்கினேன். நான் 4 வருஷமா சிறையில் இருந்தாலும், என் உயிர் தமிழக மக்கள சுத்திதான் இருந்துச்சு. தமிழக மக்கள் கொரோனாவால பாதிக்கப்பட கூடாதேனு நான் செய்யாத பூஜை கிடையாது. மாசக்கணக்கில் விரதம் இருந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

பொய்க்கால் குதிரை அரசு சில காலம்தான்!. அதிமுக ஆட்சி விரைவில்!.. பழனிச்சாமி அறிக்கை!...

30 வருட கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்!.. பொதுமக்கள் மகிழ்ச்சி!...

இரண்டு யானைகள் மோதல்!.. இடையில் சிக்கி சென்னை பெண் மரணம்!..

இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு முதல் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில்: கட்டணம் எவ்வளவு?

சிறையில் இருக்கும் பெண்களின் குழந்தைகளின் கல்வி நிலை: அறிக்கை தாக்கல் செய்யக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments