11 ஆண்டுகளுக்கு பின் வருகிறது ஆட்டோ உயர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு? பொதுமக்கள் அதிர்ச்சி..!
11 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் தற்போது மீண்டும் ஆட்டோ கட்டணம் உயர்த்துவது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது என்பதும், 1.8 கி.மீ., தூரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் இரட்டிப்பாக கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆட்டோ கட்டணம் உயர்த்தி 11 ஆண்டுகள் ஆகிவிட்டதை அடுத்து புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி ஆட்டோ தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இது குறித்து தமிழக போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் கூறியபோது, ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக செயலி கொண்டு வர இருப்பதாகவும், இதுவரை 1.70 லட்சம் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து உள்ளதாகவும், புதிய ஆட்டோ கட்டணம் குறித்த விவரத்தை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள நிலையில் விரைவில் புதிய கட்டணத்தை அரசு முறையாக அறிவிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
ஏற்கனவே அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்கி வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது அரசே ஆட்டோ கட்டணம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.