திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (14:20 IST)

காங்கிரஸ் ஆட்சி போல வருமா.. அண்ணாமலை நீங்கதான் பேசறீங்களா? – பதறிய பாஜக!

சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை காங்கிரஸ் ஆட்சி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவரான அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணிபுரிந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது பணியை விடுத்து தற்சாற்பு விவசாயம் செய்ய தொடங்கினார். அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த அவர் கோயம்புத்தூர் வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய அண்ணாமலை “கடந்த 20 வருடங்களாக தமிழக வளர்ச்சி தடைபட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிட கட்சிகள் இல்லாத காங்கிரஸ் ஆட்சியில் கூட தமிழகம் முன்னிலையில் இருந்தது” என்று பேசியது பாஜகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் பேச்சை நிறுத்திக் கொண்டு கிளம்பி விட்டார்.

முன்னதாக பாஜகவில் இணைந்த போது பேசிய அவர் “பாரதிய ஜனதா” மற்றும் “மாற்றம்” ஆகிய வார்த்தைகளை பிழையுடன் பேசியதை சுட்டிக்காட்டி இணையத்தில் பலர் ட்ரெண்ட் செய்த நிலையில், தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.