திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (16:09 IST)

திடீரென டெல்லி செல்லும் அண்ணாமலை.. ஈரோடு தேர்தல் நிலைப்பாடு என்ன?

Annamalai
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலை என்ன என்பதை கேட்காமலே அதிமுக வேட்பாளர் அறிவித்து விட்டதை அடுத்து இதுகுறித்து ஆலோசனை செய்வதற்காக அண்ணாமலை டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு இன்று அறிவிக்கப்பட்டார். 
 
இந்த நிலையில் பாஜக நிலைப்பாடு குறித்து ஆலோசனை செய்ய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை இன்று இரவு டெல்லி செல்வதாகவும் டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களை சந்தித்த பின் தனித்து போட்டியா அல்லது யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran