ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 20 ஜனவரி 2025 (19:30 IST)

விமான நிலையத்திற்கு மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும்: அண்ணாமலை

BJP Annamalai Vijay
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்றும் விமான நிலையத்திற்கு தான் எதிரானவன் அல்ல என்றும் அதே நேரத்தில் விவசாயிகள் நிலத்தை பிடுங்கி விமான நிலையத்தை உருவாக்கக்கூடாது என்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் இது ஒரு கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் என்றால் மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
பரந்தூரில் தான் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை, மாநில அரசு அளித்த பட்டியலில் தான் பரந்தூர் இருக்கிறது. பிரச்சனை இருக்கிறது என்றால் விஜய் ஆக்கபூர்வமான மாற்று இடம் குறித்த யோசனையை தெரிவிக்க வேண்டும்.
 
பெங்களூர் விரைவு சாலை அருகிலேயே பரந்தூர் வருகிறது, வேறு இடம் உங்களுக்கு தெரிந்தால், அதை நீங்கள் சொல்லலாம். எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடிய ஒரு மாநிலமாக தமிழகம் மாறிவிட்டால் எந்த ஒரு பொருளாதார முன்னேற்றமும் இருக்காது’ என்று கூறினார்.
 
மாநில அரசுதான் இந்த இடத்தை தேர்வு செய்த போது கவனித்திருக்க வேண்டும் என்றும் அதிமுக திமுக இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோதுதான் பரந்தூர் பரிந்துரை செய்யப்பட்டதாகவும் அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
 
Edited by Siva