திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2025 (11:50 IST)

விஜய் பரந்தூர் மக்களை சந்தித்தால்.. அந்த ஏரியா எப்படி டெவலப் ஆக போகுதுன்னு பாருங்க! - திமுக ஆர்.எஸ்.பாரதியின் பதில்!

R S bharathi

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை விஜய் சந்திப்பது குறித்து திமுக ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரந்தூர் மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச உள்ளார்.

 

இதனால் திமுகவிற்கு நெருக்கடி ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ஆர்.எஸ்.பாரதி “பரந்தூர் மக்களை விஜய் சந்திப்பதால் திமுகவிற்கு எந்த நெருக்கடியும் இல்லை. அவர் மக்களை சென்று சந்திப்பதை திமுக எந்த வகையிலும் ஆட்சேபிக்கவில்லை. திமுக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் மக்கள் நலனுக்காகவே செயல்பட்டு வருகிறார்கள். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதால் அந்த பகுதி பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றத்தை காணும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K