1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (09:17 IST)

கோவையில் அண்ணாமலை பின்னடைவு.. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை..!

annamalai
தமிழகத்தின் விஐபி தொகுதிகளில் ஒன்றான கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்னடைவுளில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நிலையில் அவர் கோவையில் பாஜக தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார். 
 
அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார் என்பவரும் அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் என்பவரும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைமணி ஜெகநாதன் என்று வரும் போட்டியிடுகின்றனர் 
 
இந்த நிலையில் கோவையில் தற்போது தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் அண்ணாமலை அதில் பின்னடைவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தான் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் தபால் வாக்குகள் முடிவடைந்து மற்ற வாக்குகள் எண்ணும்போது அண்ணாமலை முன்னிலை பெறுவார் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழகத்தில் திமுக 32 தொகுதிகளிலும் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் பாஜக இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் முன்னிலையில் இருப்பதாகவும், மத்திய சென்னையில் தயாநிதி மாறன் முன்னிலையில் இருப்பதாகவும், சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வ கணபதி முன்னிலையில் இருப்பதாகவும், சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva