1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (09:18 IST)

தமிழகத்தில் மொத்தமாக அள்ளுகிறது திமுக கூட்டணி.. கணக்கையை தொடங்கியது பாஜக..!

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்திய அளவில் பாஜக அபாரமாக வெற்றி பெற்று வருகிறது என்றும் 220 தொகுதிக்கும் மேல் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக கிட்டத்தட்ட மொத்தமாக அள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை முன்னிலை விவரங்கள் 24 தொகுதிகளில் தெரிய வந்துள்ள நிலையில் திமுக 22 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும், பாஜக ஒரு தொகுதிகளையும் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
இந்த எண்ணிக்கை அப்படியே இருக்குமா? அல்லது மாறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்பதால் மீண்டும் தமிழக எம்பிக்களுக்கு அமைச்சர் பதவி கிடைப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது
 
Edited by Siva