திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (12:24 IST)

ஆளுநர் ரவி கூறிய கருத்தில் என்ன தவறு உள்ளது? டிஆர் பாலுவுக்கு அண்ணாமலை பதிலடி..!

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு செய்யும் துரோகம் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடுமையாக சாடியுள்ள நிலையில் ஆளுநர் ரவி கூறிய கருத்தில் என்ன தவறு உள்ளது?  என டிஆர் பாலுவுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றி வரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாறு கிடைக்கவில்லை எனவும்,  தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்துவிட்டதாகவும் பொய்யாக பேசி வருவதாக டி.ஆர்.பாலு குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, ‘ தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என ஆளுநர் ரவி கூறியதில் என்ன தவறு உள்ளது என்றும் எத்தனை தலைவர்களின் பெயர்கள் தமிழக பாடத்திட்டத்தில் உள்ளன என வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran