திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (10:56 IST)

பாஜக பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: தாம்பரம் அருகே பரபரப்பு.!

Bomb
தாம்பரம் அருகே பாஜக பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு நடந்துள்ள நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

தாம்பரம் அருகே பள்ளிக்கரணை என்ற பகுதியில் மதனகோபால் என்ற பாஜக  கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் வாழ்ந்து வருகிறார். நேற்று மாலை 6 மணி அளவில் அவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் வந்த நிலையில் அவரது வீட்டில் திடீரென மண்ணெண்ணெய் குடு வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு காரணமாக பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து  மதனகோபால் மற்றும் அவருடைய உறவினர்களிடம் விசாரித்தனர். அவருடைய வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Edited by Siva