கோடநாடு வழக்கில் அதிமுகவினர் மீது தவறு இல்லை - அண்ணாமலை
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் கிடையாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்தமான பங்களா கொடநாடில் உள்ளது. ஓய்வு நாட்களை ஜெயலலிதா அங்கு கழிப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஜெயலலிதா இறந்தபிறகு அந்த பங்களா செக்யூரிட்டிகளால் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொடநாடு பங்களாவில் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த இரண்டு காவலர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து சில ஆவணங்களையும், பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், அப்பகுதியில் பேக்கரி வைத்திருந்த சயான் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கனகராஜ் – எடப்பாடியார் இடையே தொடர்பு இருந்ததாகவும், அவரது சொல்படி கனகராஜ் செயல்பட்டதாகவும் சயான் சொல்லியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
இதனிடையே கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் கிடையாது. முடித்து வைக்கப்பட்ட வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் முதல்வர் பெயரை சேர்க்க முயற்சி. கொஞ்சம் இனிப்பு, பெரிய கசப்பு, பெருவாரியான காரம் இதுதான் திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.