ஆன்லைன் ரம்மி அவரச தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்தவில்லை: அண்ணாமலை
ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும் ஆனால் தமிழ்நாடு அரசுதான் நடைமுறை படுத்தவில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி அவர்களை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்றும் ஆனால் தமிழ்நாடு அரசுதான் அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்
மேலும் ஆன்லைன் அவசர சட்டம் என்பது முழுக்க முழுக்க சைபர் கிரைம் சார்ந்து வருகிறது என்றும் இது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் அந்த அதிகாரம் மத்திய மாநில அரசுகளை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டிய கடமை கவர்னருக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து கவர்னர் அலுவலகத்திலிருந்து மாநில அரசிடம் கேட்ட விளக்கத்திற்கு மாநில அரசும் சில விளக்கங்கள் கொடுத்துள்ளது என்றும் எனவே கவர்னர் வேலையே செய்யவில்லை அவர் கையெழுத்து போடவில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Edited by Mahendran