திமுகவுக்கு என் மீது எந்த அளவுக்கு பயம் இருந்தால் இப்படி விமர்சிப்பார்கள்: அண்ணாமலை
திமுகவுக்கு என் மேல் எந்த அளவுக்கு பயம் இருந்தால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சிப்பார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்
திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்து வரும் நிலையில் அதற்கு அண்ணாமலை கோவையில் நடந்த கூட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார்
திமுகவிற்கு என் மேல் எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள் என்றும் கச்சத்தீவு புகாரில் மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்
தமிழக மக்களை திமுக வஞ்சித்துள்ளது என்றும் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதில் காங்கிரஸ் திமுக சதி உள்ளது என்றும் இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பங்கு உண்டு என்றும் தெரிவித்தார்
திமுகவின் போலி முத்திரையை நான் அம்பலப்படுத்தி வருவதால் தான் என் மீது அவர்களுக்கு பயம் இருக்கிறது என்றும் அதனால் தான் என்னை ஆட்டுக்குட்டி என்று விமர்சனம் செய்து வருகின்றனர் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்
Edited by Mahendran