1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (11:51 IST)

கர்நாடகாவுக்கு எதிராக போராட்டம்! – மாட்டு வண்டியில் வந்த அண்ணாமலை!

கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்தார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை கண்டித்து இன்று தமிழக அளவில் பாஜக போராட்டம் நடத்துகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பாஜக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார். இதற்காக அவர் மாட்டுவண்டியில் வந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.