Daily Horoscope
✕

புயலால் தள்ளி வைக்கப்பட்ட அண்ணாமலையின் நடைப்பயணம்.. மீண்டும் தொடங்குவது எப்போது?

Written By Mahendran
Updated: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (11:57 IST)
தமிழகத்தை மிக்ஜாம் புயல் தாக்கியதை அடுத்து அதன் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக  என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய நடை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 
 
நடை பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்த அண்ணாமலை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு சென்று நிவாரண உதவி வழங்கி வருகிறார். 
 
இந்த நிலையில் தனது நடை பயணத்தை மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்க இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அன்றைய தினம் செஞ்சியில் இருந்து நடை பயணம் தொடங்கும் என்று பாஜக பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்  
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  என்மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்... திருமாவளவன் திடுக் தகவல்...

கரப்பான்பூச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட பிரபல நடிகர்.. நாட்டை விட்டு வெளியேற கோர்ட் உத்தரவு...

இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எத்தனை நாள் நீடிக்கும்? எங்கெங்கு கனமழை?

ஒரு எலுமிச்சம்பழம் ரூ.15.. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி...

அம்பத்தூரில் டேட்டா சென்டர்.. அன்னாசி பழத்தை முதல்வர் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணை பிரதமர் உருட்டியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments