திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (19:38 IST)

தமிழக பாஜக தலைவரானார் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மேலிடம் சற்று முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்றார் என்பது தெரிந்ததே 
 
அதேபோல் தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் அவர்கள் நேற்று மத்திய அமைச்சர் பொறுப்பை ஏற்றார். இந்த நிலையில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் பாஜக தலைமை தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை புதிய தலைவர் என பாஜக தலைமை அறிவித்துள்ளது. அண்ணாமலையின் தலைமையில் தமிழக பாஜக தமிழகத்தில் செல்வாக்கை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்