புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 மார்ச் 2021 (19:09 IST)

வயல்வெளியில் திடீரென பிடித்த தீ: பிரச்சாரம் செய்து கொண்டிருந்த அண்ணாமலை உதவி!

அரவக்குறிச்சி பகுதியில் திடீரென வயல்வெளியில் தீப்பிடித்த நிலையில் அங்கு பிரச்சாரத்துக்கு சென்ற அண்ணாமலை தீயை அணைக்க உதவிய சம்பவத்தின் வீடியோ வைரல் ஆகி வருகிறது 
 
 தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது இதனையடுத்து அவர் தற்போது தீவிரமாக அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார் 
 
 இந்த நிலையில் அவர் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது வயல்வெளி ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை பார்த்த  அவர் உடனே காரை நிறுத்தி வயல்வெளிக்கு சென்று அங்கிருந்த தண்ணீரை எடுத்து தீயை அணைத்தார்
 
  அவருடன் வந்திருந்த பாஜக கட்சி தொண்டர்களும் தீயை அணைக்க உதவினார்கள். இதனையடுத்து வயலுக்கு சொந்தகார பெண் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தக்க நேரத்தில் அவர் வந்து உதவி செய்யாவிட்டால் தனது வயல்  முற்றிலும் எரிந்திருக்கும் என்று அவர் பேட்டியளித்துள்ளார்,.