அண்ணாவை தவறாக சொல்லவில்லை, சரித்திரத்தில் இருந்ததை சொன்னேன்: அண்ணாமலை
முன்னாள் முதலமைச்சர் பெயர் அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணாதுரையை நான் தவறாக சொல்லவில்லை என்றும் சரித்திரத்தில் இருந்ததை தான் எடுத்துக் கூறியிருக்கிறேன் என்றும் அண்ணாமலை கூறி இருக்கிறார்
மேலும் நான் யாருடைய அடிமையும் கிடையாது என்றும் கும்பிடு போட்டுக் கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கூழை கும்பிடு போட்டு கூட்டணியில் இருக்க மாட்டோம் என்றும் அது தன்மான பிரச்சினை என்றும் அவர் பதில் அளித்துள்ளார். அவரது இந்த பேச்சு அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva