கட்டுப்பாடு போடுங்க.. தடை விதிக்காதீங்க! – விநாயகர் சதுர்த்திக்கு அண்ணாமலை கோரிக்கை!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தொடர்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கலாம். தடை விதிப்பது அவசியமற்றது. பள்ளிகள் திறப்பை பாஜக வரவேற்கிறது” என கூறியுள்ளார்.