1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (16:44 IST)

நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்: அண்ணாமலை கண்டனம்..!

நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் குறித்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
செங்கல்பட்டில், வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த ஒருவரை, நீதிமன்றம் அருகில் வைத்து, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு ஓட ஓட விரட்டி வெட்டியிருக்கிறது அந்த கும்பல். 
 
திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழகம் குற்றவாளிகளின் புகலிடம் ஆகியிருக்கிறது. நீதிமன்றங்கள் அருகிலும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடப்பது, இந்த ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் புலப்படுகிறது. 
 
இது போன்ற தொடர் சம்பவங்களால், பொதுமக்களுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. திமுக அரசு தனது மெத்தனப் போக்கைத் தொடராமல், உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக
 சார்பாக வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran