அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சொந்தமான ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சொத்துக்கள் மதுரை தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது/
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை தற்காலிகமாக முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்த காலத்தில் தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையின் கீழ் தற்போது சொத்துக்கள் முடக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva