1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (21:15 IST)

தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை நாங்கள் முதல்வராக்குவோம்.. ஆனால்: அன்புமணி

Anbumani
தலைச் சமூகத்தினர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு தந்தால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் முதல்வராக்குவோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஒரு தலித் முதல்வராக முடியாது என்றும், ஆனால் திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார்.

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாமக தலைவர் அன்புமணி ’ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவோம், இது வெறும் பேச்சல்ல, முதன் முதலில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தான் நாங்கள் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தோம் என்றும் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி தான் பட்டியலின மக்களுக்கு அதிகம் செய்தது என்றும் 1998 ஆம் ஆண்டில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை அமைச்சர் ஆக்கினோம்,  ஆனால் 1999 இல் தான் ஆ ராசாவை, திமுக மத்திய அமைச்சர் ஆக்கியது என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran