1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (10:25 IST)

அன்புச்செழியன் நண்பர் சிக்கினார்: போலீஸ் தீவிர விசாரணை

நடிகர், இயக்குனர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அன்புச்செழியனை பிடிக்க போலீஸார் பல்வேறு விதங்களில் தீவிர முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அன்புச்செழியனின் நெருங்கிய நண்பரும் அவருடைய மேனேஜருமான முத்துக்குமார் என்பவர் சற்றுமுன்னர் போலிசாரிடம் சிக்கினார்.
 
சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள அவருடைய கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் அவரை பிடித்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். அன்புச்செழியன் எங்கே இருக்கின்றார் என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் முதல்கட்டமாக அன்புச்செழியன் மற்றும் முத்துக்குமார் இருவரும் சமீபத்தில் ஐதராபாத் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஐதராபாத்தில் இருந்து அன்புச்செழியன் எங்கே சென்றார் என்பது குறித்து முத்துக்குமாரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அன்புச்செழியன் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அன்புச்செழியன் பிடிபட்டால் மட்டுமே இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நகரும் என்பது குறிப்பிடத்தக்கது.