Daily Horoscope
✕

தொடங்கியது பேராசிரியரின் இறுதி ஊர்வலம் – திமுக தலைவர் பங்கேற்பு !

Updated: சனி, 7 மார்ச் 2020 (16:47 IST)
கீழ்ப்பாக்கம் இல்லத்தில் இருந்து பேராசிரியர் க அன்பழகனின் இறுதி ஊர்வலம் சற்று முன்னர் தொடங்கியது.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 12 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு அவர் மறைந்தார்.

தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில்  வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது இறுதி ஊர்வலம் சற்று முன்னர் அவரது கீழ்ப்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டது.

அவரது உடல் கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் க.அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments