திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 4 டிசம்பர் 2021 (15:31 IST)

சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்திப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிக்கலாவுடன் தினகரன் இன்று சந்தித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஊழல் வழக்கில் சிறை சென்று 4 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் விடுதலை ஆனார். அவரை முன்னணி அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் சந்தித்தனர்.

இதையடுத்து அவ்வப்போது அதிமுக முக்கிய பிரமுகர்களுடன் சசிககால் போனில் பேசும் ஆடியோ இணையதளத்தில் வைரலானது.  அதேபோல் ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும் அவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று சென்னை தி.நகர் இலத்தில் சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சந்தித்துள்ளார்.  இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றதாகத் தெரிகிறது.