1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

மீண்டும் அதிமுகவுக்கு வந்த ராஜவர்மன்!

அதிமுகவில் இருந்து அமமவுக்கு சென்ற ராஜவர்மன் இப்போது மீண்டும் அதிமுகவுக்கே வந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை அதிமுக வெளியிட்ட போது அதில் அப்போதைய சாத்தூர் எம் எல் ஏ ராஜவர்மனின் பெயர் இல்லை. அவருக்கும் அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசலே அதற்குக் காரணம் என சொல்லப்பட்டது. இதனால் அவர் அமமுகவுக்கு சென்று அங்கு தொகுதி பெற்று தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.