வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (10:09 IST)

திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி...! 4 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கியது மாவட்ட நிர்வாகம்...!!

Thirparapu falls
திருப்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது


 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகளில் நீர் வரத்து அதிகரித்து அபாய அளவை தாண்டியதால் இந்த மூன்று அணைகளில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்திற்கும் அதிகமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியல் தண்ணீர் ஆர்ப்பரித்து அருவியே வெளியே தெரியாத அளவுக்கு ஆக்கிரோஷமாக தண்ணீர் பாய்ந்து சென்றது.

இந்நிலையில் கடந்த  ஞாயிற்று கிழமை ( டிசம்பர் 17 ) முதல் திற்பரப்பு அருவியில்  சுற்றுலா பயணிகளின்  பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் குறைந்தது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்ட நிலையில் அருவிக்கு வரும் தண்ணீர் வரத்து சீரானது. இதையடுத்து நான்கு நாட்களுக்கு பிறகு  தற்போது  சுற்றுலா  பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மழை மற்றும் தொடர்ந்து அருவிக்கு தடை விதித்து இருந்ததால் காலையில் சுற்றுலா  பயணிகள் வருகை மிக குறைவாக காணப்பட்டது.