வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (18:46 IST)

2026 தேர்தலில் கூட்டணியா? விஜய் கையிலதான் இருக்கு! - காத்திருக்கும் சீமான்?

Seeman Vijay

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து சீமான் பதில் அளித்துள்ளார்.

 

 

நடிகர் விஜய் தனது சினிமா பணிகளை முடித்து கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். வரும் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகப்படுத்த உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. மேலும் விஜய் அரசியலுக்கு வந்ததும் சீமானின் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்குமா என்ற கேள்வியும் இருந்து வருகிறது.

 

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் “எனது தம்பி விஜய் செப்டம்பர் மாதத்தில் கட்சி பணிகளை தொடங்குகிறார். 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அந்த நேரத்தில்தான் யோசிக்க முடியும். தேர்தல் கூட்டணி பற்றி தம்பி விஜய்தான் முடிவெடுக்க வேண்டும். அதை அப்போது பேசுவோம். இப்போது பேசி பயனில்லை” எனக் கூறியுள்ளார்.

 

இதனால் நடிகர் விஜய்க்கு சம்மதம் என்றால் கூட்டணி அமைக்க விருப்பத்தில் உள்ளதை சீமான் மறைமுகமாக தெரிவிக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K