இன்றுமுதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: பேருந்து, கோயில்கள் மக்கள் கூட்டம்!

இன்றுமுதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: பேருந்து, கோயில்கள் மக்கள் கூட்டம்!
siva| Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (07:17 IST)
இன்றுமுதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: பேருந்து, கோயில்கள் மக்கள் கூட்டம்!
தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் இன்று தமிழகம் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு உள்ளேயும் மாவட்டங்களுக்கு வெளியேயும் பேருந்துகளில் காலை 6 மணி முதல் ஓடத் தொடங்கியுள்ளன. 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இன்று காலை முதலே பேருந்துக்ளில் பயணம் செய்து வருகின்றனர்

அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன என்பதும் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி மலைக்கோட்டை கோயில், நெல்லை நெல்லையப்பர் கோயில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று காலை முதலே பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இன்று முதல் துணிக்கடைகள் நகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவே கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :