Daily Horoscope

மதுப்பிரியர்களின் அலப்பறைகள்... வைரலாகும் மீம்ஸ்

Written By Sinoj
Updated: திங்கள், 14 ஜூன் 2021 (19:33 IST)
இன்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் மது வாங்க வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மதுக்களை வாங்கி செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மதுக் கடைகளில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து பார்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என பார் உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறந்துள்ளதால்…குடிமகன்களில் அலப்பறைகள் தற்போது வைரலாகி வருகிறது.

குறிப்பாக மதுபானக் கடைகளின் முன்பாக மதுப்பிரியர்கள் செய்யும் அட்டூழியங்களும், குடித்துவிட்டு தெருவில் அவர்கள் செய்யும் செயல்களும் வீடியோவாகவும், மீம்ஸாகவும் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments