மதுபானங்களின் விலை உயர்வுக்கு...மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கடும் கண்டனம்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று முதல் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
டாஸ்மாக்கின் மூலமாக அரசு மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டிவருகிறது. பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் 100 கோடி ரூபாய் அளவுக்கு தினசரி வியாபாரம் நடக்கும் என சொல்லப்படுகிறது. பண்டிகை நாட்களில் அல்லது விடுமுறைக்கு முந்தைய நாட்களில் வருவாய் இன்னும் அதிகமாக உள்ளது. அரசின் வருவாயில் டாஸ்மாக் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் சரக்குகளின் விலை 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை அதிகமாக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதுசம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று நடப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் வருவாய் அதிகமாகக் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த மதுபான விலை உயர்வுக்கு தமிழ் நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், டாஸ்மாக் மதுப்பிரியர்கள் விரைவில் ஒரு மாநாடு நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.