1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (00:36 IST)

அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா முழு வீச்சு ஏற்பாடு

anmeegam
ஆன்மீக பணிகளில் தனி முத்திரை பதிக்க, அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா முழு வீச்சு ஏற்பாடு கரூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் 
 
அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் – கரூர் மாவட்டத்தில் முப்பெரும் விழாவாக மாவட்ட கருத்தரங்கம், பொதுக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தேர்தல் என்று நடைபெற்றது
 
கரூரில் உள்ள தனியார் மஹாலில், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தேசிய பொதுச்செயலாளர் வெங்கடேஷன் தலைமையில் நடைபெற்றது. தேசிய துணை தலைவர் விநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் அணிஸ்குமார், தமிழ் மாநிலத்தலைவர் எல்.ஆர்.ராஜூ,  மண்டல செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆண்டு அறிக்கையை வாசித்தார். வரவுசெலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் பி.ஆர்.வாசுதேவன் வாசித்தார். கூட்டத்தில், அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபாவின் கூட்டம் இனி மாதந்தோறும் நடத்துவது என்றும், வருகின்ற கரூர் மாரியம்மன் திருவிழாவினை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் மூன்று தினங்கள் நடத்துவது என்றும், வருகின்ற மண்டல மகர காலங்களில் அன்னதானத்தினை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதில், பிரச்சார சபாவின் போசகர் பி.என்.கே.மேனன் அவர்களுக்கும், ஆற்றல்மிகு தேசிய தலைவர் கே.ஐயப்பதாஸ் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நாங்கள் நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றும் தேசிய பொதுச்செயலாளர் வெங்கடேஷன் இறுதியில் தெரிவித்தார். மேலும், ஆன்மீக பணிகளில் அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரச்சார சபா சார்பில் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை ஏற்பாடு செய்ய இந்த கூட்டம் முழு ஒத்துழைப்பு எடுப்பதாகவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு அதனை தேசிய பொதுச்செயலாளர் வெங்கடேஷன் அறிவித்தார்.