வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (17:17 IST)

ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் உதவிய அஜித் குழு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் இன்று திறக்கப்பட்டது என்பதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார் என்பதும் தெரிந்தது.அதன் பின்னர் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை இன்று முதல்வர் திறந்து வைத்தார் 
 
இந்த சிலையை திறக்க திறப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் அஜித்தின் தக்‌ஷா குழுவினர்களும் உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்பு விழாவில் அஜீத் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழுவினர்களால் உருவாக்கப்பட்ட ட்ரோன் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் உதவிய அஜித் குழு!
இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் அஜித் குழுவினகளின் ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்