1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜனவரி 2021 (09:55 IST)

வேதா நிலையத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு: தமிழ அரசு மேல்முறையீடு

ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக வேதா நிலையம் இன்று திறக்கப்பட உள்ளது என்பதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இந்த நிலையத்தை திறக்க உள்ளார் என்பதும் இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் வேதா நிலையம் இன்று திறக்கப்பட்டாலும் இந்த கட்டிடத்தை பொதுமக்கள் பார்வையிட முடியாது என்றும், நேற்று நீதிமன்றம் வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுத்து உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வேதா நிலைய கட்டடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
வேதா நிலைய கட்டடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய உடமைகள் கணக்கு எடுக்கவில்லை என்றும் அதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், அதேபோல் மக்கள் அனுமதி இல்லை என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது குறித்து அரசு மேல்முறையீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை அடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது