ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.