வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (14:29 IST)

அதிமுக வேட்பாளர் செல்வி 553 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 
 
அதில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றியம் 11-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் செல்வி 1837 வாக்குகளும், திமுக வேட்பாளர் குல்ஜார் பி 1284 வாக்குகளும் பெற்றனர். மேலும் 553 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் நரசிம்மன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.