1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (16:28 IST)

கோவை வரும் கவர்னருக்கு கருப்புக்கொடி: தந்தை பெரியார் இயக்கம் அறிவிப்பு

governor
சமீபத்தில் மயிலாடுதுறை சென்ற கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த கட்டமாக கோவை வரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டப்படும் எனதந்தை பெயர் தான் திராவிட கழகம்m கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, கோவை வரும் கவர்னருக்கு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று கூறினார் 
 
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை ஊட்டி செல்வதற்காக கோவை விமான நிலையம் வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது