1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (17:50 IST)

ஈபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிருவீங்க...

முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நேற்று வந்த சென்னை காவல் கட்டுப்பாட்டு ஆணையத்துகு வந்த தொலைபேசி அழைப்பில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் உள்ள முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் சோதனை நடத்தினர். அதையடுத்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுனர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. 
 
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அழைப்பு கோவையில் இருந்து வந்துள்ளதாக முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில் முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஒரு பெண் என தெரியவந்துள்ளது. பார்வதி எனும் அவர் பெரியநாயக்கன்பாளையம் அதிமுக ஒன்றிய மகளிர் அணியின் முன்னாள் தலைவி ஆவார், தற்போது அந்த பெண் கைதும் செய்யப்பட்டுள்ளார்.