அமமுக தலைமையில் கூட்டணி... அதிமுக சேர்க்கப்படும் - தினகரன்
அமமுக தலைமையில் தேர்தல் கூட்டணியில் அதிமுக வந்தால் தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்ளப்படும் என தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சென்னை திநகரில் சசிகலா இல்லத்தில் அவரைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ,கூறியதாவது :
அமமுக தலைமையில் கூட்டணி அமையும்.அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நாளை முதல் நடைபெரும் ஏனத் தெரிவித்தார்.மேலும் அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக - பாஜக கூட்டணியை ஏற்கத்தயார் ...எங்களுடைய ஒரே நோக்கம் திமுக ஆட்சி அமையக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.