அதிமுக எம்பி சாலை விபத்தில் மரணம்! அதிர்ச்சி தகவல்
விழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் இன்று நடந்த சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 62
அதிமுக எம்பி ராஜேந்திரன் சென்ற கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் எம்பி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் திமுக வேட்பாளரை விட சுமார் 2 லட்சம் ஓட்டு அதிகம் பெற்று எம்பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது
ராஜேந்திரன் எம்பி மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.