டெல்டாவுக்கு வழிய காணோம், இதுல நினைவு ஊர்வலத்துக்கு பிளானிங்... என்ன அரசோ இது?
கஜா புயல் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கரையை கடந்த போது, டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தது. இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
மக்கள் இன்னும் பாதிப்புகளை இருந்து மீளாததற்கு தமிழக அரசின் மெத்தன போக்குதான் காரணம் என பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆளும் அதிமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால், அதிமுக அரசு இதை கண்டுக்கொள்ளாமல் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னையில் வருகிற 5 ஆம் தேதி நினைவு ஊர்வலம் நடத்த திட்டம் போட்டு வருகிறார்கள்.
அதாவது, வருகிற புதன்கிழமை (5 ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு, சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகே இருந்து துவங்கி ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தி பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி அனைத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த நினைவு ஊர்வளத்தில் அதிமுக தொண்டர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.