ஸ்டாலின் ஆதரவு கேட்டும் ஏற்காமல் வெளிநடப்பு செய்த அதிமுக!
நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
நீட் தேர்வு பயத்தால் நேற்று சேலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் இன்று நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்பாக நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு வரவில்லை. நீட் தேர்வை எதிர்ப்பதற்கான எந்த திராணியும் அதிமுகவுக்கு இல்லை என முதல்வர் விமர்சித்தார். இதனால் அதிமுக - திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.