வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 25 மே 2016 (15:40 IST)

பதவியேற்கும் முன்பே அதிமுக எம்எல்ஏ திடீர் மரணம்

பதவியேற்கும் முன்பே அதிமுக எம்எல்ஏ திடீர் மரணம்

சட்டமன்றத்தில் பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏ சீனிவேல் இன்று காலை மரணம் அடைந்தார்.


 

 
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 93353 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் சீனிவேல் (65).
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் மரணம் அடைந்தார்.
 
பதவியேற்கும் முன்பே அதிமுக எம்எல்ஏ  மரணம் அடைந்தது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.