வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 1 ஜூன் 2016 (12:14 IST)

அக்கப்போர் - அதிமுக அமைச்சர்களுக்கு திமுக உதவியாளர்கள்

அக்கப்போர் - அதிமுக அமைச்சர்களுக்கு திமுக உதவியாளர்கள்

தற்போது, அதிமுக அமைச்சர்களுக்கு முன்பு, திமுக அமைச்சர்களுக்கு உதவியாளராக இருந்த சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

 
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க அதிமுக 134 தொகுதியில் வெற்றி பெற்றது. முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இதனையடுத்து, அமைச்சர்கள் குழுவாக பதவியேற்றுக் கொண்டனர்.
 
இந்த நிலையில், தமிழக அரசு அமைச்சர்களின்  பிஏக்கள் நியமிக்கும் பணி நடைபெற்றது. இதில், கடந்த காலத்தில், திமுக அமைச்சர்களுக்கு உதவியாளர்களாராக சிலர் தற்போது உள்ள அதிமுக அமைச்சர்களுக்கும் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்களாம்.
 
இந்த தகவல் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கல்தா படலம் வராலம் என்கிறது கோட்டை வட்டாரம்.